Saturday, March 20, 2010

நல்வரவு

இது நம் உலகம். நீங்களும் நானும் வாழும் உலகம்.

இதில் நீங்களும் நானும் வந்து போகிறவர்கள். வந்து போகிறவர்கள் யாரும் இந்த உலகை சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால், நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம்?
இதை ஏதோ நாம் உருவாகியது போலவும், நமக்கு பிறகு இது தேவையில்லை என்பது போலவும், போட்டி போட்டுக்கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள்.
நாம் வாழ இந்த உலகை அழகாய் விட்டுச் சென்றார்கள்.

நமக்குப் பின் கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள்.
அவர்களுக்கு இந்த உலகை நாம் அழகாய், வாழும்படி விட்டுச் செல்ல வேண்டாமா?

நாகரீகத்தில் (!) வளராமல் இருந்த மக்களுக்குஇருந்த அக்கறை,
இவ்வளவு வசதிகளுக்குப் பிறகும் நம்மிடம் இல்லையே?

இது நாம் வாழும் பூமி. நாம்தான் காக்க வேண்டும்.

0 comments: